உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வி முறை [1] (Educational system) என்பது பரவலாகஅனைத்து கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பையும் ஒரு நாட்டிற்குள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் குறிக்கிறது. குடும்பக் கல்வி அல்லது குழந்தைப் பருவக் கல்வி தொடங்கி, மழலையர் பள்ளி, தொடக்க, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைப் பள்ளிகள், பின்னர் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்தக் கட்டமைப்பில் தொழில்முறை, பொதுக் கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் அடங்கும்.

கல்வி முறை பொதுவாக ஒரு நாட்டின் தொடர்புடைய சட்டங்களின்படி ஒழுங்கமைக்கப்பட்டாலும், ஒரு நாட்டிற்கான கல்வி முறையானது ஒழுங்குபடுத்தப்படாத அம்சங்கள் அல்லது பரிமாணங்களைக் கொண்டிருக்கலாம். பொதுவாக, ஒரு கல்வி அமைப்பு ஒரு நாட்டின் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் கல்வியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்குக் கல்வி கற்பதில் உள்ள அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) அதன் சர்வதேச தரக் கல்வி (ISCED) அமைப்பில் நிலை 0 (முன் ஆரம்பக் கல்வி) முதல் நிலை 8 வரை உள்ள ஒன்பது நிலைக் கல்வியை அங்கீகரித்துள்ளது. யுனெஸ்கோவின் சர்வதேசக் கல்விப் பணியகம் நாடு சார்ந்த கல்வி முறைகள் மற்றும் அவற்றின் நிலைகளின் தரவுத்தளத்தை பராமரிக்கிறது. [2]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wallace, Dorothy (2009). "Parts of the Whole: Approaching Education as a System". 2. doi:10.5038/1936-4660.2.2.9. 
  2. Revision of the International Standard Classification of Education (ISCED), Retrieved 5 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_அமைப்பு&oldid=3985911" இலிருந்து மீள்விக்கப்பட்டது